ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

vinoth
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (12:33 IST)
கன்னட சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் செயல்பட்டு வந்த ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா படங்களின் மூலம் பேன் இந்தியா அளவில் அறியப்பட்ட நடிகராக உள்ளார். சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது.

அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா -1’ ரிலீஸாகியுள்ளது. இந்த படமும் முதல் பாகம் போலவே வெற்றிகரமாக ஓடி இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. காந்தாரா படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து ரிஷப் ஷெட்டி ஜெய் ஹனுமான் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் ஹ்ரூத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments