Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க காட்டு தீயில் சிக்கிய பிரபல நடிகை! – சோகத்துடன் ட்வீட்!

Advertiesment
அமெரிக்க காட்டு தீயில் சிக்கிய பிரபல நடிகை! – சோகத்துடன் ட்வீட்!
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (13:41 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகை காட்டு தீ பகுதியில் அவதிப்பட்டு வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட தீயால் சான் பிரான்சிஸ்கோ நகரமே செவ்வானமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் காதல் கணவருடன் வாழ்ந்து வந்த பிரபல நடிகை ரிச்சா கங்கோபத்யாய காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்துள்ளவர் தமிழில் ஒஸ்தி, மயக்கமென்ன போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது அமெரிக்க காதலரை மணந்து கொண்டு கலிபொர்னியா மாகாணம் போர்ட்லேண்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கலிபொர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் போர்ட்லேண்ட் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாகவும், மக்கள் மூச்சு விடவே சிரமப்படுவதாகவும் தானும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளதாகவும் ரிச்சா தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருத்தர் படிச்சா வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா நாடே மாறும்: சூர்யா டுவீட்