சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்
கால் எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த கமல், இன்று வீடு திரும்பினார்.
3 வாரங்களுக்கு முன், ஆழ்வார்பேட்டையிலுள்ள அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் கமலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
சில தினங்கள் முன்பு, காந்தியார் போல் இருவர் உதவியுடன் நடந்தேன் என்று கமல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே, இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எனினும், மேலும் சில வாரங்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்