Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெருப்புடா பாடலுக்கு ஆட்டம் போட்ட பேரன்: ஒன்ஸ் மோர் கேட்ட ரஜினி

நெருப்புடா பாடலுக்கு ஆட்டம் போட்ட பேரன்: ஒன்ஸ் மோர் கேட்ட ரஜினி
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (09:44 IST)
தனுஷ் வீட்டில் தங்கியிருந்த ரஜினி, அவரது பேரன் நெருப்புடா, ஆலுமா டோலுமா, பாடலுக்கு ஆட்டம் போட்டத்தை ரசித்து, ஒன்ஸ் மோர் கேட்டுள்ளார். 


 

 
கபாலி படப்பிடிப்பு முடித்துவிட்டு ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்றார் ரஜினி. அப்போது அவரோடு அவர் மனைவி மற்றும் இரு மகள்களும் கூடவே சென்றனர். சிறிது நாட்களில் அவரது மனைவி மற்றும் சௌந்தர்யா நாடு திரும்ப, ஐஸ்வர்யா மட்டும் அங்கு தங்கி அவருக்கு உதவியாய் இருந்துள்ளார்.
 
ரஜினி ஐஸ்வர்யாவிடம் உன்னை குழந்தைகளை விட்டு பிரிந்து இருக்க முடியுதா என்று கேட்டுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா, அப்பா அவர் குழந்தைகளை நன்றாக பார்த்துகொள்வார், அவர்தான் இந்த நேரத்தில் அப்பா கூட இருக்கனும் கூறினார், என்றார்.
 
கபாலி படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்த தனுஷ், அங்கு விசில் அடிக்க, அந்த விசில் ரஜினி காதுக்கு போக, ரஜினி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தனுஷ் பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாளில் தனுஷ் அவரது வீட்டில் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ரஜினி வீட்டுக்கு சென்று அங்கும் ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம்.
 
அப்போது தனுஷிடம் பார்ட்டி ஏதும் இல்லையா மாப்பிளை என்று கேட்டுள்ளார் ரஜினி. உடனே பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார் தனுஷ். பார்ட்டியில் உங்க வீட்டு வந்து இரண்டு நாட்கள் தங்கட்டுமா என்று ரஜினி தனுஷிடம் கேட்க, பார்ட்டி முடிந்த கையுடன் தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளார் ரஜினி.
 
அங்கு தனுஷ் சுட்ட தோசையை சாப்பிடதுடன், அவரது பேரன்களை கொஞ்சி விளையாடியுள்ளார். நெருப்புடா, ஆலுமா டோலுமா பாடலுக்கு பேரன் ஆட்டம் போட, அதை கைத்தட்டி, ரசித்து ஒன்ஸ் மோர் கேட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல’ - அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் பிரியாமணி