Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெமோ தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நிவின் பாலி

ரெமோ தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நிவின் பாலி

ரெமோ தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நிவின் பாலி
, சனி, 25 ஜூன் 2016 (14:51 IST)
நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி இப்போது மலையாளத்தின் ஸ்டார் நடிகர். பிஸியான மலையாள ஷெட்யூல்டுக்கு நடுவில் தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார்.


 


கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் அப்படம், கன்னடத்தில் வெளியான உலிதவரு கண்டெந்தே படத்தின் ரீமேக். தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
இதையடுத்து மேலும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க நிவின் பாலி ஒப்புக் கொண்டுள்ளார். ரெமோ படத்தை தயாரித்து வரும் ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க, அறிமுக நடிகர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
 
ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அதன் பிறகு நிவின் பாலி நடிக்கும் படம் தொடங்கப்படும் என்று ராஜா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செயின் ரியாக்ஷன் இப்படியா இருக்கும்...?