செயின் ரியாக்ஷன் இப்படியா இருக்கும்...?
செயின் ரியாக்ஷன் இப்படியா இருக்கும்...?
Publish Date: Sat, 25 Jun 2016 (14:17 IST)
Updated Date: Tue, 28 Jun 2016 (17:04 IST)
செயின் பறிப்பை மையப்படுத்திய படம் சென்சாரில் சிக்கி பிரபலமடைந்தபோது, படத்தின் மீது அனைவருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதில் ஒரு வெள்ளைமனம் படத்தின் விநியோக உரிமையை விலைபேசி முடித்தது. பத்து எல் என்று முடிவானது வியாபாரம்.
படத்தைப் பார்த்த ஒருசில வாயாடிகள், இந்த வருஷத்தின் கபாலி இதுதான் என்ற ரேஞ்சுக்கு தூக்கியடிக்க, தயாரிப்பாளருக்கும், நம்ம படத்தின் வேல்யூ நமக்கே தெரியலையோ என்று சின்ன கிறக்கம் ஏற்பட்டிருக்கிறது.
வெள்ளைமனம் முறைப்படி விநியோக உரிமையை எழுதி வாங்க வந்த போது, இன்னும் முப்பது எல் சேர்த்து கொடுங்க என்று தயாரிப்பாளர் கத்தியை வைக்க, கலங்கிப் போனார் வெள்ளைமனம்.
அதற்குள் படமும் வெளியாகி சாயம் வெளுத்துப் போனது. இனி சும்மா தந்தாலும் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார் பத்து எல் வியாபாரம் பேசியவர்.
Sasikala
Publish Date: Sat, 25 Jun 2016 (14:17 IST)
Updated Date: Tue, 28 Jun 2016 (17:04 IST)