Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரிச்சலுகை இல்லாமல் வெளியாகும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு

வரிச்சலுகை இல்லாமல் வெளியாகும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு

வரிச்சலுகை இல்லாமல் வெளியாகும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு
, வியாழன், 9 ஜூன் 2016 (11:05 IST)
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படங்கள் என்றால் விடலைத்தனமான காதல் நிரம்பியிருக்கும் என்ற பெயர் எப்படியோ அமைந்துவிட்டது.


 


அவரது படங்கள் யு சான்றிதழ் பெறுவதும் அரிது. ஜுன் 17 வெளியாக உள்ள எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படமும் யுஏ சான்றிதழுடனே வெளியாகிறது.
 
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்தை லைக்கா தயாரித்துள்ளது. கயல் ஆனந்தி நாயகி. டார்லிங் படத்தில் நடித்த மொட்ட ராஜேந்திரன், கருணாஸ் இருவரும் இருக்கிறார்கள்.
 
ஜுன் 17 படம் வெளியாகும் நிலையில், படத்தை தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினர். படத்தைப் பார்த்தவர்கள் யுஏ சான்றிதழ் அளித்தனர். யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வரிச்சலுகை என்பதால், வரிச்சலுகை இல்லாமல் படம் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுராக் காஷ்யப் படத்துக்கு 89 கட் - ஏன்? எதற்கு?