Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை

இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை

இன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (08:07 IST)
வெள்ளிக்கிழமையான இன்று 3 படங்கள் வெளியாகிறது. விக்ரம் பிரபுவின் 'வாகா', ராஜுமுருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியாகிறது 'ஜோக்கர்'.


 


ஆனால், நித்யா மேனன் - 'ஈ' சுதீப் நடித்துள்ள 'முடிஞ்சா இவன புடி' படம் வெளியாவது கொஞ்சம் சிக்கல். பக்கா அரசியல் பேசும் 'ஜோக்கர்' மற்றும் 'வாகா' ரேஸில் முந்துகிறது.
 
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘முடிஞ்சா இவன புடி’. கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
லிங்கா படத்தின் தோல்வியால் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தினால்தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கினர். அதனால், ‘முடிஞ்சா இவன புடி’ வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றம் ஏற்பட, 'லிங்கா' விநியோகஸ்தர்கள் பணம் கேட்டு வந்தனர். இதனையடுத்து பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது.
 
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதியான இன்று 'முடிஞ்சா இவன புடி' திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு விஜயகாந்த் அஞ்சலி