Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"சர்வம் தாள மயம்" படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு!

, திங்கள், 24 டிசம்பர் 2018 (09:54 IST)
`சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


 
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சர்வம் தாள மயம்'. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தை மின்சாரக்கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கியிருக்கிறார். 
 
முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 
 
நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 
 
ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், சர்வம் தாள மயம் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இதன் வெளியீட்டு தேதி தள்ளிப் போயிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும் விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்.டி.ஆர் ட்ரைலருக்கு இவ்வளவு வரவேற்பா..!