கண் தானம் செய்த பிரபல நடிகை
கண் தானம் செய்த பிரபல நடிகை
நடிகை ரெஜினா தற்போது கண் தானம் செய்து, உடல் உறுப்பு தானம் மூலம் இறந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவுபவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
தமிழின் இளம் நடிகைகளில் ஒருவரான ரெஜினா தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'மாநகரம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா ஒய்வு நேரங்களில் சமூகம் குறித்தும் சிந்திக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்லூரில் உள்ள கண் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்த ரெஜினா தனது கண்களையும் தானம் செய்துள்ளார். அதற்கான ஒப்புதல் பத்திரத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்யும் பல பிரபல திரையுலகினர் பட்டியலில் தற்போது ரெஜினாவும் இணைந்துள்ளார்.