Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்டி டைரி: தன்னுடைய வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (18:20 IST)
தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க  இருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ்  திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
 
சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.  பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.
 
இந்நிலையில், ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க உள்ளனர். அலாவுதீன் என்பவர் இயக்கிறார். தித்திர் பிலிம் ஹவுஸ்  பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
இப்படத்தில் பல புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க உள்ளதாகவும், எனது வாழ்க்கையில் நடந்த அனைத்து  சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாகவும், ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்