Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே நடிகைகளை அனுபவிக்கத்தான்; ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி தகவல்!

Advertiesment
வெளிநாடு படப்பிடிப்பு
, சனி, 21 ஜூலை 2018 (12:03 IST)
தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகாரை அடுத்து தமிழிலும் இது போன்று நடப்பதாக புகார் கூறியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி பாலியலுக்கு அழைப்பது பற்றி விளக்கியுள்ளார். ஆந்திராவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஸ்ரீரெட்டி, வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின்  பேரில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும், பின்னர் நடிகைகளை பேட்டியெடுக்கவும், அதன்பிறகு திரைப்படத் துறையில் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு,  திரைப்பட நடிகையாகியுள்ளார்.
 
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் இயக்குநர்களோ, நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள்  அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார். உனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன்.  ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு, என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான் நடிகைகளை திரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கு தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.
 
சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகளை அழைத்துக் கொண்டு காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள். சில நேரங்களில் ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே நடிகைகளை  அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீ ரெட்டி குண்டைத் தூக்கி போடுகிறார். ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார்.
 
தமிழ் திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீ ரெட்டி, தமிழகத்தில்  இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிகின்றனர் என்றும் ஸ்ரீரெட்டி தெவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல்துறை ஆணையர் ரோலில் பிரபுதேவா; படத்தின் பெயர் என்ன தெரியுமா..?