சாதி பெருமித படங்களுக்கு புத்துயிர் அளித்த படம், 2013 -இல் வெளிவந்த குட்டிப்புலி. முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த இந்தப் படம் தேவர் சாதி பெருமை பேசும் படமாக விமர்சிக்கப்பட்டது.
3 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார். மதுரைப் பின்னணியில் இந்தப் படம் தயாராக உள்ளது.
குட்டிப்புலி சுமாராகப் போனாலும் அதையடுத்து முத்தையா இயக்கிய கொம்பன் ஹிட்டானது. அதையடுத்து, மருது. இப்போது மீண்டும் சசிகுமார் படம்.
சசிகுமாருக்கு கிராமத்து கதை பொருத்தமாக இருப்பதால் இந்தக் கூட்டணி வெற்றிக்கனியை பறிக்கும் என நம்பப்படுகிறது.