Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்திற்கும், விவாகரத்திற்கும் நானே காரணம்: பிரபல நடிகை வருத்தம்!!

திருமணத்திற்கும், விவாகரத்திற்கும் நானே காரணம்: பிரபல நடிகை வருத்தம்!!
, புதன், 31 மே 2017 (16:16 IST)
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதும் பின்னர் பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்வது வழக்கமானது தான். ஆனால், இதில் சில விதிவிலக்காகவும் உள்ளனர்.


 
 
அந்த வகையில், திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்திலேயே விவாகரத்து பெற்றவர் நடிகை மனிஷா கொய்ராலா.
 
தற்போது இவர் நடித்துள்ள டியர் மாயா என்ற படம் வெளியாக உள்ளது. அப்போது அவர் தனது திருமண வாழ்க்கை பற்றி பேசினார். திருமணத்தை பற்றி ஏதேதோ கனவு வைத்திருந்தேன்.
 
அவசரப்பட்டு திருமணம் செய்து பிறகு இது நமக்கு சரிவராது என்று உணர்ந்தேன். இதனால் விவாகரத்தும் செய்தேன். இதற்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கிறேன். இதில் யார் தவறும் கிடையாது, அனைத்தும் என் தவறு தான் என வருத்தமாக பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கமித்ராவில் ஸ்ருதி ஹாசனுக்குப் பதில் ஹன்சிகா?