Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'இந்தியன் 2' லோகேஷன்: ஒளிப்பதிவாளர் வெளியிட்ட அற்புதமான ஸ்டில்

Advertiesment
'இந்தியன் 2' லோகேஷன்: ஒளிப்பதிவாளர் வெளியிட்ட அற்புதமான ஸ்டில்
, செவ்வாய், 8 ஜனவரி 2019 (18:40 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் பொங்கல் முடிந்தவுடன் தொடாங்கவுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது குழுவினர்களுடன் இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் உள்ளார். தற்போது தாய்லாந்தில் உள்ள இந்த குழுவினர் அழகிய கட்டிடம் ஒன்றை முக்கிய காட்சிகளுக்கு படமாக்க தேர்வு செய்துள்ளனர். இந்த கட்டிடத்தின் முன் ஷங்கர் நின்றவாறு உள்ள புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

webdunia
தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத அரிய லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் கமல்ஹாசன், சிம்பு, துல்கர் சல்மான், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ லவ் தி வுமன்: உள்ளாடையில் கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை!