Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதாநாயகி பக்கமே நெருங்கவிடாமல் சதி: ரவிமரியா

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (12:33 IST)
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் டீகே இயக்கியுள்ள நகைச்சுவை திகில் படம், ‘காட்டேரி.’


வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகிய 3 பேரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.  நடிகர் ரவிமரியா வில்லன் வேடத்திலும், கருணாகரன் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படக்குழுவினர்  பத்திரிகையாளர்களை சந்தித்து காட்டேரி படம் குறித்து பேட்டி அளித்தனர். அப்போது வில்லன் நடிகர் ரவிமரியா பேசுகையில்,
‘‘இந்த படத்தின் கதாநாயகன் வைபவும், நகைச்சுவை நடிகர் கருணாகரனும் என்னை கதாநாயகி பக்கமே நெருங்கவிடாமல் சதி செய்து பார்த்துக்கொண்டார்கள். திகில் படங்களில், ‘சந்திரமுகி’க்கு அடுத்தபடியாக புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் இதுதான். பாக்யராஜ் போல் வித்தியாசமாக யோசித்து திரைக்கதை அமைத்து இருக்கிறார், டீகே.

ஒரு காட்சியில், வரலட்சுமி என்னை காலினால் உதைக்க வேண்டும். அதற்கு முன்பு அவர், நான் டைரக்டர் பாலாவின் மாணவி. உதைப்பது எல்லாமே நிஜமான உதையாக இருக்கும் என்று என்னை பயமுறுத்தினார். இன்னொரு நாயகி சோனம் பாஜ்வாதான் என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments