Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேஜிஎப் 2’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (16:30 IST)
’கேஜிஎப் 2’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை
பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்திவருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் தமிழில் ’சாது’ என்ற படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்தவரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ரவீனா டாண்டன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தகவலை கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 
ரவீனா டாண்டன் இந்த படத்தில் இணைவதில் மகிழ்ச்சி என்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கேஜிஎப் 2’ இயக்குனர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ரீநிதிஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டுக்குள் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments