Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

vinoth
சனி, 7 ஜூன் 2025 (09:58 IST)
மதயானை கூட்டம், இராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன்  சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன் என்பதும், அதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ‘இராவணக் கோட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அவரது மரணத்தை அடுத்து ‘ராவணக் கோட்டம் படத்தைத் தயாரித்த துபாயைச் சேர்ந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி தற்போது அவரது குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார். இதை கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி சென்னைக்கு வந்து நேரடியாக விக்ரம் சுகுமாரனின் அம்மாவிடம் நிதியுதவியை அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments