Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

vinoth
வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (13:42 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து முதல்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக ‘கூலி’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனரும் லோகேஷின் நண்பருமான ரத்னகுமார் கூலி படம் வெற்றிபெற வாழ்த்தியுள்ளார். இது சம்மந்தமான பதிவில் “என் நண்பரும், எழுத்தாளரும், இயக்குனருமான, நடிகரும், தயாரிப்பாளருமான லோகேஷ் இன்னுமொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்.  நீங்கள் மேலும் உயரவேண்டும்” என வாழ்த்தியுள்ளார். லோகேஷிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ரத்னகுமார் லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினியைத் தாக்கிப் பேசியதால் கூலி படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் ஊக்கம் பெறும் விதமாக ‘கலாம்’ படம் இருக்கும்… இயக்குனர் ஓம் ராவத் நம்பிக்கை!

அஜித்தின் செல்ஃபோனில் ரஜினியின் ‘Hukum’ பாடல்தான் ரிங்டோனா?..!

ஹீரோவானார் நடிகர் முனீஸ்காந்த்… கிராமத்துப் பின்னணியின் ‘Dark’ காமெடிப் படம்!

மீண்டும் சினிமாவுக்கு வரும் கங்கனா… ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கத் திட்டம்!

கூலி படத்தில் பிரபலமான ரச்சிதா ராம்தான் லோகேஷுக்கு ஹீரோயினா?

அடுத்த கட்டுரையில்
Show comments