நீங்க விளக்கம்லாம் சொல்ல வேணாம்.. எனக்கு புரியுது! – ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ராஷ்மிகா பதில்!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (10:23 IST)
புஷ்பா படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் அதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த விளக்கத்திற்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான படம் புஷ்பா. இந்த படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் மூலம் அவர் பல மொழிகளிலும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா படம் குறித்தும், ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் குறித்தும் ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் “சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கு தெலுங்கி சினிமா பிடிக்கும். புஷ்பா படத்தின் ‘ஸ்ரீவள்ளி’ கதாப்பாத்திரத்தை ரொம்ப பிடித்திருந்தது என கூறியிருந்தேன். ஆனால் அந்த கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நான் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன் என கூறியதாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள நடிகை ராஷ்மிகா “நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள தேவையில்லை. உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments