Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரத்தான் வாழ்க்கைக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளி – லாக்டவுனால் மகிழ்ச்சியான ராஷ்மிகா மந்தனா!

Webdunia
சனி, 30 மே 2020 (07:35 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா லாக்டவுனால் கிடைத்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் லாக்டவுன் காலங்களில் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேசிய அவர், லாக்டவுன் நாட்களால் அடைந்த மகிழ்ச்சி பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘என் 18 வயதில் இருந்து வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போல இருந்தது. போட்டி முடிந்தது என நினைக்கும் போதெல்லாம், மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் ஒரு புகாராகக் கூறவில்லை. இத்தனை நாட்கள் நான் வீட்டில் இருந்ததே இல்லை. பள்ளிப்பருவம் தொடங்கி உயர்கல்வி முடிக்கும் வரை விடுதியில்தான் தங்கியிருந்தேன். இந்த ஊரடங்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். நாங்கள் யாரும் இப்போது வேலையைப் பற்றி பேசுவதே இல்லை. நான் இத்தனை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments