ஷங்கரின் அடுத்த படத்தில் ராஷ்மிகாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:45 IST)
ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இந்நிலையில் இப்போது படத்துக்கான மற்ற கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறதாம்.

தெலுங்கு சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments