Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தா நடிக்க இருந்த படத்தில் ராஷ்மிகா… எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் பட அப்டேட்!

Advertiesment
சமந்தா நடிக்க இருந்த படத்தில் ராஷ்மிகா… எஸ் ஆர் பிரபு தயாரிக்கும் பட அப்டேட்!
, திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:52 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் வாரிசு படத்துக்கு தமிழ் சினிமாவில் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தில் சமந்தா நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழச மறந்து இயக்குனர் ஹரி ஸ்டுடியோவுக்கு வருகை தந்த சூர்யா!