ராச்மிகா இரு மொழிகளில் நடிக்கும் ரொயின்போ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:13 IST)
இதுவரை 20க்கும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் இதுவரை சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வாரிசு படத்துக்கு தமிழ் சினிமாவில் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தில் சமந்தா நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ரெயின்போ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் உருவாக உள்ள நிலையில் அறிமுக இயக்குனர் ஷாந்தபிரபு இந்த படத்தை இயக்குகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments