Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டிய கிளாமர்… அனிமல் படத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:31 IST)
அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள அனிமல் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதிலும் ராஷ்மிகா மந்தனாவைக் காட்சி படுத்தியுள்ள விதம் பெண்ணியவாதிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த படத்தில் உள்ளாடையோடு சில காட்சிகளில் ராஷ்மிகா நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் அவர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்க அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச மார்க்கெட்டில் இருக்கும் பாலிவுட் நடிகைகள் கூட இந்தளவுக்கு சம்பளம் வாங்கியதில்லை என்பதால் இப்போது பாலிவுட் நடிகைகளே ராஷ்மிகா மேல் கடும் பொறாமையில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்த படம் 10 நாட்களில் 717 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments