Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தகாத தீண்டல்… சங்கடத்தில் ரஷ்மிகா?

தகாத தீண்டல்… சங்கடத்தில் ரஷ்மிகா?
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:10 IST)
மும்பையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு ராஷ்மிகா சென்ற போது சில கங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளார் நடிகை ரஷ்மிகா.

 
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா பாலிவுட்டில் அமிதாப் பச்சனோடு இணைந்து குட்பை என்னும் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ராஷ்மிகாவுக்கு புஷ்பா படம் பாலிவுட்டிலும் பெயர் வாங்கி கொடுத்துள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலுக்கு ராஷ்மிகா சென்ற போது அவரை காண மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதை சிறிதும் எதிர்ப்பார்க்காததால் ரஷ்மிகா சில கங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
webdunia

ஆம், பவுன்சர்களை மீறி ராஷ்மிகாவை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். சிலர் ராஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்தும் உடலை தொட்டும் அத்துமீறினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்மிகா ஒரு பிரபலமாக இருப்பதால் அவர் பொது வெளியில் இப்படி வந்திருக்க கூடாது எனவும் கடவுளின் அருகில் நின்று சாமி கும்பிடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததற்காக ராஷ்மிகா ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் அவர் ரசிகன்...அந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்- ஷங்கர்