கபாலி படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ரஞ்சித் இயக்குகிறார்.
மெட்ராஸ் படத்துக்குப் பிறகு ரஞ்சித் சூர்யாவை இயக்குவதாகத்தான் இருந்தது. அவருக்கான கதையை அவர் எழுதி ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில்தான் கபாலி பட வாய்ப்பு வந்தது.
கபாலி வெளியான நிலையில் மீண்டும் சூர்யாவுக்கான கதையை மெருகேற்ற ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா பாக்சராக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஞ்சித் இதுவரை இயக்கிய படங்களில் ஆக்ஷன் அதிகம் உள்ள படமாக இது இருக்கும் என்கிறார்கள்.
சூர்யா எஸ் 3 படத்தை முடித்தபின் ரஞ்சித்தின் படம் தொடங்குகிறது.