Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“என்னுடைய குழந்தையோடு நான் விளையாட முடியுமா?... “ ரன்பீர் கபூர் ஆதங்கம்!

Advertiesment
ஆலியா பட்
, சனி, 10 டிசம்பர் 2022 (09:11 IST)
ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ரன்பீர் கபூர் சமீபத்தில் கலந்துகொண்ட சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது “நான் ஏன் ஒரு தகப்பனாக இவ்வளவு நேரம் எடுத்துகொண்டேன் என தெரியவில்லை. மிகப்பெரிய பாதுகாப்பின்மையை உணர்கிறேன். என் குழந்தைக்கு 20 வயது ஆகும் போது எனக்கு 60 வயது ஆகும். அப்போது என்னால் என் குழந்தையோடு நான் ஓடியாட விளையாட முடியுமா” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் நடிகையை மணக்கும் கியாரா அத்வானி…!