இந்தியா முழுவதும் வெற்றிபெறும் படங்களை உருவாக்க தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அவ்வாறான வெற்றியைப் பெற்றதை அடுத்து பாலிவுட்டில் இருந்தும் தென்னிந்தியாவை குறிவைத்து படங்கள் உருவாகின்றன.
அந்தவகையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பேன் இந்தியா திரைப்படமான பிரம்மாஸ்திரம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் இந்த படம் ஏமாற்றவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 25 நாட்களைக் கடந்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் 425 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு பாலிவுட் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக பிரம்மாஸ்திரா அமைந்துள்ளது.