700 கோடு வசூலைக் கடந்த ரன்பீர் கபூரின் அனிமல்… குறையாத கலெக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:11 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  அனிமல் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் இந்த படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் 527 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது 10 நாட்களில் 717 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments