ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கவின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்” சிங்கிள்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:06 IST)
ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் கைவிடப்பட்ட ஸ்டார் படத்தை டாடா புகழ் கவின் நடிப்பில் மீண்டும் தொடங்கி முடித்துள்ளார் இயக்குனர் இளன். இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஸ்டார் படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ என்ற பாடல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் கவின் 90ஸ் கெட்டப்பில் காணப்படுகிறார். இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments