தளபதி 64 அப்டேட்: படத்தில் கமிட்டான பிரபல ஆங்கர்!!

சனி, 9 நவம்பர் 2019 (15:52 IST)
நடிகையும், தொகுப்பாளினியுமான ரம்யா, தளபதி 64 படத்தில் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 
அட்லி இயக்கத்தில் பிகில் படம் வெளியானதி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். 
 
அதோடு மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ரம்யா இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ’நீதான் ரசிகன்’ ... ’சூப்பர் ஸ்டார் ’படம் வெளியாவதால் திருமண தேதியை மாற்றி வைத்த ரசிகர்..!