Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலரைக் கரம்பிடித்த ரம்யா பாண்டியன்… குவியும் வாழ்த்துகள்!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (16:17 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.  அவர் சேலைகட்டி கிளாமராக வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலானது. அதன் பின்னர் அவருக்கான ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியது.

இந்த நிலையில், ரம்யா பாண்டியன் பெங்களூரில் உள்ள யோகா சென்டருக்கு பயிற்சிக்காக சென்ற போது, அங்குள்ள யோகா டீச்சர் லோவல் தவான் என்பவரோடு அவருக்குக் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இன்று ரிஷிகேஷில்  இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் இன்று நடந்துள்ளது. மணமக்கள் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாக, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments