Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விறுவிறுப்பாக நடக்கும் ‘Queen 2’ படப்பிடிப்பு… பிரபல நடிகை பகிர்ந்த Onset புகைப்படங்கள்

Advertiesment
Ramya Krishnan
, புதன், 15 ஜூன் 2022 (09:56 IST)
வெற்றிபெற்ற குயின் சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. குயின் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தலைவி படத்தை விட குயின் இணையத்தள தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி இருந்தார்கள். இந்த தொடர் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். குயின் இரண்டாம் பாகம் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் துவங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் முதல்பாகத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வேடத்தில் நடித்த சோனியா அகர்வால் தற்போது படப்பிடிப்புத் தளத்தில், ரம்யா கிருஷ்ணனோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென உயர்ந்த இதயதுடிப்பு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்!