Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடூர வில்லி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்: எந்த படத்தில் தெரியுமா?

Advertiesment
கொடூர வில்லி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்: எந்த படத்தில் தெரியுமா?
, வியாழன், 23 ஜனவரி 2020 (19:40 IST)
பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி மூன்று தேசிய விருதுகளை குவித்த திரைப்படம் ‘அந்தாதூன்’. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்பட பலர் நடித்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் வாங்கியுள்ளார் என்பதையும், இந்த படத்தில் நாயகனாக அவரது மகன் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதையும், இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தாதூன் படத்தில் கொடூர வில்லியாக தபு நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. தான் வாழ்வதற்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற கேரக்டரில் நடித்திருந்த தபு கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் ராதிகா ஆப்தே கேரக்டரில் நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது வரும் பிப்ரவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் ஆரம்பம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வருகிறது நடிகர் சங்க பிரச்சனை: நாளை தீர்ப்பு