Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடூர வில்லியா.... ஒதுங்கிய நதியா; கமிட்டான ரம்யா கிருஷ்ணன்

கொடூர வில்லியா.... ஒதுங்கிய நதியா; கமிட்டான ரம்யா கிருஷ்ணன்
, திங்கள், 15 ஜனவரி 2018 (15:54 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இருந்து நதியா விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பட் டீலக்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் பகத் ஃபாசல், சமந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி இதில் திருநங்கையாக நடிக்கிறார்.
 
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நதியா படத்தில் இருந்து விலகியுள்ளார். ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கு வந்த நதியா, தான் கொடூர வில்லியாக நடிக்க வேண்டும் என்பதை அறிந்த பிறகு படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. 
 
நதியா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் விக்ரம்