Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்போது தொடங்குகிறது விஷ்ணு விஷால் ராம்குமார் திரைப்படம்?

எப்போது தொடங்குகிறது விஷ்ணு விஷால் ராம்குமார் திரைப்படம்?
, செவ்வாய், 7 மார்ச் 2023 (09:45 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முதலில் தனுஷுக்காகதான் எழுதினார் ராம்குமார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இப்போது விஷ்ணு விஷால் நடிக்கவே பட்ஜெட் எல்லாம் குறைக்கப்பட்டு வருகிறதாம். அதனால் தயாரிப்பு நிறுவனம் இயக்குனரின் சம்பளத்தையும் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்துக்கான ஹீரோயின் தேடும் படலம் தற்போது நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் தொடங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கமித்ரா படத்தில் இருந்து விலகும் விஷால்? அவருக்கு பதில் இவரா?