Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தமுறை காதல் பேண்டஸி…. விஷ்ணு விஷாலின் அடுத்த படம் பற்றி இயக்குனர் ராம்குமார்!

இந்தமுறை காதல் பேண்டஸி…. விஷ்ணு விஷாலின் அடுத்த படம் பற்றி இயக்குனர் ராம்குமார்!
, திங்கள், 23 ஜனவரி 2023 (11:27 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ராம்குமார் “ முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, பேண்டசி அம்சங்களுடன் கூடிய காதல் படமாக இந்த படம் இருக்கும். காடு மற்றும் மலைப் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கும். இன்னும் கதாநாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கு தடை போட்ட அஜித்… இதுதான் காரணமா?