Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்சேஞ்சர் ரிலீஸ்… ஷங்கரால், தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட சிக்கல்!

vinoth
செவ்வாய், 26 நவம்பர் 2024 (10:07 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் திரையரக விநியோக உரிமை 40 கோடி ரூபாய் என்று  நிர்ணயித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. ஆனால் இந்தியன் 2 தோல்வியால் தமிழகத்தில் ஷங்கர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நம்பிக்கை இல்லை. அதனால் விநியோகஸ்தர்கள் தயங்க, தற்போது டிஸ்ட்ரிபியூஷன் முறையில் பணமே பெற்றுக்கொள்ளாமல் ரிலீஸ் செய்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments