முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

vinoth
புதன், 2 ஜூலை 2025 (08:05 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரன்பீர். முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

அடுத்த கட்டுரையில்
Show comments