ராமாயணம் உலகளவில் அதிக அளவில் பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உலக சாதனை படைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை அடுத்து தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பப்படும் என்ற செய்தியால் மக்கள் மீண்டும் தூர்தர்ஷனை நோக்கி திரும்ப தொடங்கினர்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒளிபரப்பப்பட்ட, ராமாயணம் உலகளவில் அதிக அளவில் பார்க்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கேம் ஆப் த்ரோன்ஸ் உருவாக்கி வைத்திருந்த 19.3 மில்லியன் பார்வைகளை (மே மாதம்) தாண்டியுள்ளது.
ஆம், டிடி நேஷனல் ஏப்ரல் 16 அன்று உலகம் முழுவதும் 77 மில்லியன் (7.7 கோடி) மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்பட அனைத்து தனியார் தொலைக் காட்சிகளையும் டிஆர்பியில் தூர்தர்ஷன் முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.