Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ராமராஜன்… படத்தின் தலைப்பு இதுதான்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:11 IST)
நடிகர் ராமராஜன் 80 களின் இறுதியில் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற நடிகராக வலம் வந்தவர்.

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வருகிறாராம்.

நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்ற உறுதியோடு இருந்து வரும் அவர் மேதை படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் பெரிய திரையில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் மற்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனராம். இந்த படத்துக்கு சாமான்யன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments