அக்ஷய் குமார் நடித்துள்ள ராம்சேது திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
இந்தி இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள படம் ‘ராம் சேது’. இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலத்தை இடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் அங்கு ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரத்தை ராமாயண இதிகாசத்தை கொண்டு கண்டுபிடிக்க ஆய்வாளர் குழு ஒன்று செல்கிறது. அந்த குழுவின் தலைவராக அக்ஷய் குமார் செல்கிறார்.
ஆனால் அவர்கள் ராமர் பாலம் குறித்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு கும்பல் தடுக்கிறது. இந்த கும்பல் யார்? இவர்களை சமாளித்து அக்ஷய்குமாரின் டீம் ராமர் பாலம் குறித்த ரகசியத்தை கண்டுபிடித்தார்களா என்பது கதை. இந்த படம் அக்டோபர் 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் சம்மந்தமாக பேசியுள்ள படக்குழு “இந்த படம் உண்மைத் தகவல்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புனைவுகளோ கற்பனையோ இல்லை. இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமையும்” எனக் கூறியுள்ளனர்.