Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விஜய் பட ஹீரோயின் நடிக்கும் புது சீரிஸ்!

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விஜய் பட ஹீரோயின் நடிக்கும் புது சீரிஸ்!
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (13:15 IST)
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இஷா கோபிகர் நடிக்கும் புதிய சீரிஸான தகனம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது இவர் முதல் முறையாக இயக்கியுள்ள வெப் சீரிஸான ‘தகனம்’ MX ஒரிஜினலாக வெளியாகியுள்ளது. கிரைம் சம்மந்தமான இந்த சீரிஸில் இஷா கோபிகர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இஷா கோபிகர் தமிழில் விஜய்யுடன் நெஞ்சினிலே மற்றும் அரவிந்த் சுவாமியுடன் ‘என் சுவாசக் காற்றே’ ஆகிய படங்களில் நடித்தவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஆகச்சிறந்த படைப்பு”… ரஜினியை அடுத்து சூரி பாராட்டிய லேட்டஸ்ட் தமிழ்ப்படம்!