Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ram anjali
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:31 IST)
ராம்-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு!
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்திற்கு ’ஏழு கடல் ஏழு மலை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நிவின்பாலி, அஞ்சலி, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மாநாடு படத்தை பிரமாண்டமாக தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 
 


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் செய்து கொள்வது எப்போது..? – ஓப்பனாக சொன்ன த்ரிஷா!