Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை… ரகுல் ப்ரீத் சிங்!

Advertiesment
ரகுல் ப்ரீத் சிங்

vinoth

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (09:11 IST)
கன்னட சினிமாவில் இருந்து இந்திக்கு சென்று அங்கு வெற்றிப் படங்கள் கொடுத்து முன்னணி நடிகையானவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் சமீபத்தில் அவர் நடித்த இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை. இதனால் சமீபத்தில் காதலரை கரம்பிடித்தார் ரகுல்.

ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பது பற்றி அவரிடம் கேட்டபோது ”திருமணம் என்பது நடிகைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக் கூடாது. அதனால் திருமணத்துக்குப் பின்னர் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. சொல்லப்போனால் திருமணத்துக்குப் பிறகுதான் என் அழகும் கவர்ச்சியும் கூடியிருப்பதாக உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘லோகா’…!