Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசியில்லாத நடிகையா ரகுல் ப்ரீத்சிங்?

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (21:46 IST)
ராசியில்லாத நடிகை என ரகுல் ப்ரீத்சிங் மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது. தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். ஆனால், அவரை இங்கு யாரும் கண்டு கொள்ளாததால், தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவராக ஆன ரகுல் ப்ரீத்சிங், மகேஷ் பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் மறுபடியும் எண்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.
 
இருந்தாலும், கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நன்றாக ஓடியது. ஆயினும், அடுத்தடுத்து ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்த இரண்டு படங்கள் அவர் கைநழுவிப் போய்விட்டன. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சாய் பல்லவியும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த இரண்டு படங்களிலும் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments