Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலரோடு வெளிநாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (09:12 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை காதலரோடு வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவரின் பிறந்தநாளின் போது தயாரிப்பாளரான ஜாக்கி பனானி ரகுல் பிரித் சிங்குக்கும் தனக்கும் இடையே உள்ள காதலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த் ரகுல் ‘தன் வாழ்வில் வண்ணம் சேர்த்ததுக்கு நன்றி ‘ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை ஜாக்கி மற்றும் சக பாலிவுட் நடிகர்களோடு ரகுல் இங்கிலாந்தின் லண்டனில் கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments