Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஸ்ரீ தத்தா என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் - ராக்கி சவாந்த் அடாவடி

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (13:08 IST)
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் எனவும், தன்னையும் ஒருமுறை அவர் பாலியல் பலாதகாரம் செய்துவிட்டதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் அதிரடியாக புகார் தெரிவித்துள்ளார்.

 
கடந்த  2008–ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற பாலிவுட் படத்தின்படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடைம் அத்துமீறி நடந்து கொண்டதாகதனுஸ்ரீதத்தா புகார் தெரிவித்தார்,  மேலும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாதனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீதத்தா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  
 
இதுபோல் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் எனது உடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்று அவர் மீதும் தனுஸ்ரீதத்தா பாலியல்புகார் கூறினார். மேலும், அவர்கள் அனைவரின் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக, தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் களம் இறங்கியுள்ளார். தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் எனக்கூறி அவருக்கு எதிராக பல கருத்துகளை கூறினார்.  இதனால் ஆத்திரமடைந்த தனுஸ்ரீ தத்தா, ராக்கி சவாந்த் மீது ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கை தொடந்துள்ளார்.
 
அதைத் தொடர்ந்து, தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும், கொலை செய்யப் போவதாகவும் தனுஸ்ரீ தத்தா தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் புகார் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.
 
இந்நிலையில், ராக்கிசவாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஒருமுறை ஒரு நிகழ்ச்சிகாக சென்ற போது, என் வாயில் வலுக்கட்டாயமாக ஒரு சிகரெட்டை வாயில் திணித்தார். அதன் பின் என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் ஒரு ஓரின சேர்க்கையாளர். தனது இச்சைக்கு பெண்களையே அவர் பயன்படுத்துவார்” எனக்கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். அதோடு, ரூ. 50 கோடி கேட்டு அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தனுஸ்ரீ தத்தா மீதான ராக்கி சவாந்தின் குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்