Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுக்குள் ரஜினி தர்பார்: மேன் வெர்சஸ் வைல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (11:25 IST)
நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலின் பிரபலமான தொடரான மேன் வெர்சஸ் வைல்டில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. காட்டுக்குள் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் காட்டில் உள்ள பொருட்களை உண்டு, அங்குள்ளவற்றை வைத்தே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு பயணித்து அங்கிருந்த்து தப்பிப்பார்.

பிரபலமான இந்த தொடரில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த தொடர் இந்தியா முழுவதும் பரவலாக பாராட்டுகளை பெற்றது. தற்போது மேன் வெர்சஸ் வைல்ட் தொடரில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேன் வெர்சஸ் வைல்ட் தொடரில் கலந்து கொண்ட முதல் இந்தியராக பிரதமர் மோடி இருந்த நிலையில், இரண்டாவது நபராக ரஜினிகாந்த் உள்ளார். இந்த ஸ்பெஷல் தொடருக்கான படப்பிடிப்புகள் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய வனப்பகுதில் படமாக்கப்பட உள்ளது. இந்த வனப்பகுதி யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரது அரசியல் பயணம், சிறுவயது நினைவுகள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல ரஜினியும் தனது அரசியல் நிலைபாடு, கடந்த கால அனுபவங்கள் குறித்து நிறைய பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி சனிக்கிழமை எதிர்நீச்சல் 2 ஒளிபரப்பாகாது.. சன் டிவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிருப்தி..!

மாளவிகா மோகனன் நடிக்கும் 3 திரைப்படங்கள்.. இன்று ஒரே நாளில் வெளியான 3 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!

நந்திதாவா இது?.. கிளாமர் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் போட்டோஷூட்!

சார்லி கெட்டப்பில் பரிதாபங்கள் கோபி& சுதாகர்… Oh God Beautiful படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments